வியாழன், 23 செப்டம்பர், 2010

பிரதான செய்திகள்
சரணடைந்து காணாமல் போயுள்ள புலித் தலைவர்களின் கதி என்ன? சர்வதேச சமூகம் பதில் தரவேண்டும்! நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்-போர்க்கைதிகளை விடுவிப்பதற்கான குழு
[ 2010-09-24 01:50:31 ] []
வன்னி இறுதியுத்தத்தின் போது வெள்ளைக் கொடியுடன் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் சென்ற விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர்கள், போராளிகள் பலர் காணாமற் போன செய்திகளால் நாம் வேதனையும் கொதிப்பும் அடைகிறோம். [மேலும்]
பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தின் போது சர்வதேச சட்டங்கள் அவசியமில்லை! உலகின் எந்த நாட்டையும் விட இலங்கையிலேயே தமிழ் மக்கள் மிகவும் சந்தோசமாக இருக்கின்றனர் : ஐ.நா.வில் ஜனாதிபதி
[ 2010-09-24 01:24:15 ]
பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தின் போது, சர்வதேச சட்டத்திட்டங்கள் குறித்து அக்கறைக் கொள்ள வேண்டியதில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 65வது பொது அமர்வின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். [மேலும்]
பிந்திய செய்திகள்
எதிரியின் பாசறைக்குள் இருந்துகொண்டே குரல் எழுப்பும் புனிதர்கள் : அனலை நிதிஸ் ச. குமாரன்
[ 2010-09-24 05:34:05 ]
புலி பசித்தாலும் புல்லை தின்னாது என்ற பழமொழிக்கேற்ப எத்தனை இன்னல்களையும் பயமுறுத்தல்களையும் சந்தித்தாலும் எதிரியின் பாசறைக்குள் இருந்துகொண்டே இறுதிப்போர் காலத்தில் நடந்த சம்பவங்களை வெளிக்கொண்டு வருகின்றார்கள் புலிகளின் கட்டுப்பாட்டில் வாழ்ந்த மக்கள். [மேலும்]
அமெரிக்க தமிழ் அமைப்புக்களாலும், கனடிய தமிழர் தேசிய அவையினராலும் ஐ.நா. முன்றலில் நடாத்தப்பட்ட கவனயீர்ப்பு
[ 2010-09-24 05:05:20 ] []
கடந்த 22ந் திகதி புதன்கிழமை காலை 10.00 மணியிலிருந்து மாலை 4.00 மணிவரை நியுயோர்க் நகரில் ஐநா சபைக்கு முன்பாக அமெரிக்கத் தமிழ் அமைப்புக்களினாலும், கனடிய தமிழர் தேசிய அவையினராலும் நடாத்தப்பட்ட‌ கவனயீர்ப்பு நிகழ்வுக்கு கனடாவிலிருந்தும் அமெரிக்காவிலிருந்தும் பல நூற்றுக்கணக்கான தமிழ்மக்கள் கலந்து கொண்டார்கள். [மேலும்]
செய்திகள்
கடந்த எட்டு மாதங்களில் 120 கிலோ கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருள் மீட்பு
[ வெள்ளிக்கிழமை, 24 செப்ரெம்பர் 2010, 04:39.08 AM ]
கடந்த எட்டு மாதங்களில் நாட்டுக்குள் கடத்த முற்பட்ட 120 கிலோ கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
பழுதடைந்த போர் உபகரணங்கள் மற்றும் வெற்றுத் தோட்டாக்களை விற்பனை செய்வதற்கு முயற்சி : திவயின
[ வெள்ளிக்கிழமை, 24 செப்ரெம்பர் 2010, 04:35.09 AM ]
பழுதடைந்த போர் உபகரணங்கள் மற்றும் வெற்றுத் தோட்டாக்களை விற்பனை செய்வதற்கு சில தரப்பினர் முயற்சி மேற்கொண்டு வருவதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
அண்மையில் கைது செய்யப்பட்ட சிங்கள, தமிழ் இளைஞர்களில் பலர் பயயங்கரவாத நடவடிக்கைளுடன் தொடர்புடையவர்கள்
[ வெள்ளிக்கிழமை, 24 செப்ரெம்பர் 2010, 04:30.07 AM ]
கடந்த காலங்களில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அதிகளவான சிங்கள, தமிழ் இளைஞர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளுக்குடன் தொடர்புடையவர்கள் என பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் அறிவித்துள்ளனர். [மேலும்]
18 ஆவது திருத்தச் சட்ட மூலம் நேற்று முதல் சட்டமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது : சபாநாயகர்
[ வெள்ளிக்கிழமை, 24 செப்ரெம்பர் 2010, 04:26.28 AM ]
கடந்த 8ம் திகதி அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றப்பட்ட 18 ஆவது திருத்தச் சட்ட மூலம் நேற்று முதல் சட்டமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் சமால் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். [மேலும்]
நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளித்த தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வேண்டும்: மாவை கோரிக்கை
[ வெள்ளிக்கிழமை, 24 செப்ரெம்பர் 2010, 02:11.12 AM ]
நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னிலையில் வன்னி மக்கள் அளித்த சாட்சியத்தை இராணுவப் பேச்சாளர் மறுத்துள்ள நிலையில் அந்த மக்களின் பாதுகாப்பு தொடர்பில் எமக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, அவர்களின் பாதுகாப்புக்கு அரசாங்கம் உத்தரவாதமளிக்க வேண்டும் என்று த.தே.கூட்டமைப்பின் பா.உ. மாவை சேனாதிராஜா நேற்று சபையில் கோரிக்கை விடுத்தார். [மேலும்]
தமிழ்க் கனடியர்களின் புற்றுநோய் விழிப்புணர்விற்கான நிதிசேர் நடை: $35,000 திரட்டியது
[ வெள்ளிக்கிழமை, 24 செப்ரெம்பர் 2010, 01:56.36 AM ]
தமிழ்க் கனடியர்களின் புற்றுநோய் விழிப்புணர்விற்கான நிதிசேர் நடை பல நூற்றுக்கணக்கான மக்களது ஆதரவைப் பெற்று $35,000 இனைத் திரட்டியது. [மேலும்]
யாழ்ப்பாணத்தில் ’நமது ஈழநாடு’ அச்சகம் முத்திரையிட்டு மூடப்பட்டது - உரிமையாளர் கைது
[ வியாழக்கிழமை, 23 செப்ரெம்பர் 2010, 08:20.19 PM ]
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த ’நமது ஈழநாடு’ நாளிதழின் அச்சகம் சிறிலங்கா சிறப்பு குற்றப் புலனாய்வுக் காவல்துறையினரால் முத்திரையிட்டு மூடப்பட்டுள்ளதுடன் அதன் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். [மேலும்]
நாட்டு மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி அறிவிப்பு
[ வியாழக்கிழமை, 23 செப்ரெம்பர் 2010, 05:03.27 PM ]
நாட்டு மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய நாடுகளின் பொதுக் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார். [மேலும்]
முதலாவது இராணுவ நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பொன்சேகா மேன்முறையீடு
[ வியாழக்கிழமை, 23 செப்ரெம்பர் 2010, 03:07.43 PM ]
நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா, தமக்கு எதிரான முதலாவது இராணுவ நாடாளுமன்ற நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மேன் முறையீட்டை மேற்கொண்டுள்ளார். [மேலும்]
அவசரகால சட்டம் மேலும் ஒருமாத காலத்திற்கு நீடிப்பு
[ வியாழக்கிழமை, 23 செப்ரெம்பர் 2010, 02:55.48 PM ]
இலங்கைப் பாராளுமன்றத்தில் இன்று அவசரகால சட்டம் 92 மேலதிக வாக்குகளால் மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
புலிகளின் ஈழக் கனவை தகர்ப்பதற்கு சர்வதேச நாடுகளின் ஆதரவு அவசியம்: பிரதமர்
[ வியாழக்கிழமை, 23 செப்ரெம்பர் 2010, 02:02.43 PM ]
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஈழக் கனவை தகர்ப்பதற்கு சர்தேச நாடுகளின் ஆதரவு மிகவும் அவசியமானதென பிரதமர் டி.எம். ஜயரட்ன தெரிவித்துள்ளார். [மேலும்]
பிரித்தானியாவில் தமிழ் இளைஞர் துவிச்சக்கரவண்டி பயணம் ஊடாக விழிப்புணர்வு பரப்புரை!
[ வியாழக்கிழமை, 23 செப்ரெம்பர் 2010, 01:42.44 PM ] []
பிரித்தானியாவில் லிவெர்பூல் பகுதியிலிருந்து லண்டன் வெஸ்மினிஸ்ரர் வரையான விழிப்புணர்வு பரப்புரையை செய்யும் துவிச்சக்கர வண்டியூடான பயணம் ஒன்று இன்று ஆரம்பித்துள்ளது. இந்த விழிப்புணர்வு பயணத்தை தனிமனிதனாக திரு. சுப்பிரமணியம் யோகேஸ்வரன் அவர்கள் இன்று ஆரம்பித்துள்ளார். [மேலும்]
அரசுடன் மோதல் போக்கைக் கடைப்பிடிக்கும் எண்ணம் இல்லை - கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்
[ வியாழக்கிழமை, 23 செப்ரெம்பர் 2010, 12:10.17 PM ] []
இலங்கை அரசோடு தற்போதைக்கு மோதல் போக்கைக் கடைப்பிடிக்கும் எண்ணம் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு இல்லை என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். [மேலும்]
சட்டவிரோத கைத்தொலைபேசிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பறிமுதல்
[ வியாழக்கிழமை, 23 செப்ரெம்பர் 2010, 10:41.51 AM ]
இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் சட்டவிரோதமான முறையில் கொண்டுவந்த 2873 கையடக்கத் தொலைபேசிகளை சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
26 வது நாளில் தொடரும் நடைப்பயணத்தில் நாளாந்தம் இணையும் தமிழ் உறவுகள்
[ வியாழக்கிழமை, 23 செப்ரெம்பர் 2010, 08:13.15 AM ] []
சுவிஸ் ஜெனீவா ஐ.நா. முன்றலில் 28.08.2010 அன்று ஆரம்பிக்கப்பட்ட மனிதநேய நடைப்பயணம் புறுசெல்ஸ் ஐரோப்பிய ஒன்றியத்தை சென்றடைய இன்னும் 60 கி.மீ தூரம் மட்டுமே உள்ள நிலையில் இன்று 26வது நாளில் அனைத்துலக தமிழ் மக்களின் பேராதரவோடு பெல்ஜியம் நாட்டில் மிக உணர்வுபூர்வமாக தொடரப்பட்டு வருகிறது. [மேலும்]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக